தமிழகத்தில் ஈழ தமிழர்களின் வாழ்வு அப்படியெல்லாம் சின்னபின்னாபடுகிறது என்பதை நேரடியாக வெளிக்கொண்டுவர மேலும் ஒரு இயக்கம். சென்னையில் சீதையின் மைந்தன் என்பவர் புதியதாக ஒரு இயக்கத்தினை கருத்துரிமை பாதுகாப்பு கழகம் என்ற பெயரில் ஏற்படுத்தியுள்ளார்.
நாம் அன்றாட நிகழ்வில் தினம் தினம் ஒரு இயக்கம் முளைப்பதும் அதன் மூலம் கண்டன குரல் எழுப்புவதும் வாடிக்கையான ஒரு பொழுது போககாண இந்த நேரத்தில் ஊடங்கங்களின் இருட்டடிப்பினால்ஈழத்திலும், இங்கும் என்ன நடக்கிறது என்பதே அறியாமல் காடு கழனிகளில் உழன்று கொண்டிருக்கும் நம் கிராமத்து சொந்தங்களுக்கு இந்த சேதியினை கொண்டு சேர்க்க, ஈழத்து அவலங்களை சித்தரிக்கும் நிழல் படங்களைக் காட்சிக்கு வைத்தும், குறுந்தகடுகளை திரையிட்டு காட்டியும், நேரடியாக அமர்ந்து கலந்துரையாடியும், உண்மை நிலையனைத்தையும் அவர்கள் உணர வைக்க இவர்கள் நூறு நாட்கள் தமிழக பாட்டி தொட்டியெங்கும் "தொப்புள்கொடி உறவைக் காக்க தொடர்பயணம்"
என்ற பெயரில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். பொறுத்திருந்து பாப்போம். இவர்களாவது ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்வார்களா என்று ...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment